விடுதலைப்புலிகளின் எண்ணெய் பரல்கள் மீட்பு -புதுக்குடியிருப்பில் சம்பவம்!

0 259

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பெரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணை மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கடந்த 31.05.2022 அன்று நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பெரல்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இன்னிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் நீதிமன்றில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டமைக்கு அமைய 20.06.2022 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியினை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலீஸ் அதிகாரிகள்,படைஅதிகாரிகள்,கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன அதில் எரிபொருட்கள் இருப்பது இனம்காணப்பட்டுள்ள நிலையில் அவை மண்ணெண்ணை என அடையாளம் காணப்பட்டுள்ளது இவ்வாறு 7 பெரல்களிலும் 715 லீற்றர் மண்ணெண்ணைய் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கந்தசாமி என்பவரின் காணியில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன
தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்தோட் தோட்டம் செய்வதற்காக பனை மரத்தினை அகற்றும் போது அதில் நிலத்தில் பெரல் இனம் காணப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் பொலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் இன்று 20.06.22 நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று தோண்டியுள்ளார்கள்

இது யார் வைத்தது என்ன நடந்தது என்று தெரியாது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2009 அம் ஆண்டு கடைசியில் நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம் எங்கள் காணியில் எதுவித பொருட்களும் இனம்காணப்படவில்லை விவசாய நடவடிக்கைக்கு நிலத்தினை பண்படுத்தும் போதே இது தென்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.