முல்லைத்தீவில் அரசதிணைக்கள வாகனங்களுக்காக பெற்றோல்-மக்கள் குழப்பத்தில்!

0 440

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசதிணைக்கள வாகனங்களுக்கு மற்றும் பரீட்சை நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களுக்காக மாவட்டத்தில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கு அமைவாக தலா 6600 லீற்றர் பெற்றோல் நேற்று 20.05.2022 கிடைத்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பௌசர்கள் வந்துள்ளதை அறிந்த மக்கள் பெற்றோல் அடிப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் கூடியுள்ளார்கள் இதானல் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு தொடக்கம் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது

சாதாரண தரபரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் நடவடிக்கை மற்றும்அரச வாகனங்களின் அத்திய அவசிய தேவைக்காக இந்த எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோல் தாங்கி பெற்றோலினை இறக்கிய கையுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.இதனால் யாருக்கு எரிபொருள் வழங்குவது என்பது தொடர்பில் குழப்ப நிலைஒன்று ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அங்கு கூடி நின்ற இளைஞர்கள் வீதியினை மறிக்க முற்பட்ட வேளை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலீஸ் குழுவினர் பிரசன்னமாகி நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் எரிபொருள் வழங்குனர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளார்கள்.

எந்த வாகனமாக இருந்தாலும் 500 ரூபாவிற்கு பெற்றோலினை வழங்க தீர்மானித்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை இரவில் இருந்துமுன்னெடுக்கப்பட்டுள்ளது நள்ளிரவில் பெற்றோல் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது இதனால் பலர் குழப்பமடைந்த நிலையில் திரும்பி சென்றுள்ளார்கள்.

இவ்வாறே முல்லைத்தீவு நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச வாகனங்களின் தேவைக்காக 6600 லீற்றர் பெற்றோல் நேற்று (20.05.2022) கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மக்கள் பெற்றோலினை வழங்க வேண்டும் என வலியுறுத்திவந்துள்ள நிலையில.

இன்று 21.05.2022 காலை மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் வீதியினை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

மக்கள் தங்களின் அன்றாட தேவை பயன்பாட்டிற்காக எரிபொருளை வழங்கவேண்டும் என கேரியுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலீசார் வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க பொலீசாரின் தலையீட்டினை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலதிகமாக எரிபொருள் நிரப்ப நிலையத்திற்கு முன்னால் வந்து நிற்பவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெற்றோலினை பதுக்கும் சில செயற்பாட்டளர்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கள்ள சந்தையில் ஒரு லீற்றர் பெற்றோல் 500 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.