முல்லைத்தீவில் முக்கியஸ்தரை சந்தித்த கடற்தொழிலாளர்கள்-முக்கிய முடிவு!

0 21

முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோருக்கிடையில்முக்கிய கலந்துரையாடல் ஒன்று 13.10.21 அன்று நடைபெற்றுள்ளது.

து.ரவிகரன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இந்திய மீனவர்களால் முல்லைத்தீவுமீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் பேசப்பட்டதுடன் தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களும் தொடச்சியாக இந்திய இழுவைப்படகுகளின் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்ற நிலையில் எதிர்வரும் 17.10.21 அன்று முல்லைத்தீவில் இருந்து மீனவர்கள் கடல்வழியாக படகு மூலம் பருத்தித்துறை சென்று எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளமை குறிப்படத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.