வட கடலில் 103 மில்லியனுக்கும் அதிகமான கேராள கஞ்சாவுடன் மூவர் கைது!

0 53

வடக்கு கடலில் 103 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்களிடம் இருந்து 344 கிலோ 550 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணம், அனலைத்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாச்சிக்குடா, மன்னார் மற்றும் குருநகர் பகுதிகளை சேர்ந்த 34 முதல் 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அண்மை நாட்களாக தொடர்சியாக கேரளா கஞ்சாச வடக்கு கடற்பகுதிஊடாக கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.