ஒட்டுசுட்டானில் ஆலய குருக்கள் ஒருவருக்கு கொரோனா!

0 309

ஒட்டுசுட்டான் ஆலய திருவிழா கடந்த 08.07.21 இன்று தொடங்கவுள்ள நிலையில் ஆலயத் திருவிழா பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான குருக்கள் ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


குறிப்பாக திருவிழாவில் கலந்துகொள்ளும் குருக்கள்,நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 பேருக்கு கடந்த 07.07.21 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இன்னிலையில் அதன் முடிவுகள் நேற்று 08.07.21 இரவு வெளியாகியுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பளம்பாசி பகுதியினை சேர்ந்த ஒருவரும்,ஒட்டுசுட்டான் ஆலய குருக்கள்ஒருவரும் என தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.