உடுத்துறை கிராமத்தில் 90 பெண் தலைமத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு!

0 32

நாட்டில் பயணத்தடையினால் தொழில்முடக்கம் காரணமாக வடமராட்சி கிழக்கு உடுத்துறையினை சேர்ந்த  வறுமைக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தினை கொண்ட 90 குடும்பங்களுக்கு அவுஸ்ரேலியா வாழ் கொடையாளர் ஒருவரால் இரண்டாயிரத்தி முன்நூறு ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


அவுஸ்ரேலியாவில் வாழும் ரவிகோணேஸ்வரன் மஞ்சுளா இணையரின் 30 ஆவது திருமண ஆண்டினை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது


வன்னியின் கண்ணீர் அமைப்பின் ஏற்பாட்டாளர் எஸ்.குகதாசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் உடுத்துறை கிராமசேவையாளர்,மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர்கள் முன்னிலையில் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலலகத்தினால் வழங்கிவைக்கப்பட்ட பயனாளர்களின் விபரத்திற்கு அமைவாக இந்த உலர் உணவு பொதிகள் பெண் தமைத்துவகுடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.