விசுவமடுவில் பலநாள் கள்ளர் நால்வர் மக்களால் மடக்கி பிடிப்பு!

0 676

முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் நீண்டநாட்களாக மக்களின் வீடுகளுக்குள் சென்று நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிவந்த கொள்ளையர்கள் நால்வர் கிராம வாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.


17,18 அகவையினை உடைய விசுவமடு குமாரசாமிபுரம்,வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,இளங்கோபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் விசுவமடு மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் திருடமுற்பட்ட போது கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று 19.06.21 அன்று அதிகாலை பதிவாகியுள்ளது.


கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலீசார் மேற்கொண்ட விசாரணயின் போது அவர்கள் மேலும் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையமை தெரியவந்துள்ளது.


பொலீஸ் நிலைத்தில் தடுத்துவைத்து விசாரணையினை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.