இலங்கையில் மதுபிரியர்களுக்கு ஏமாற்றம்-ஒருமாதத்திற்கு மேலாக தொடர்கின்றது!

0 80

இணையத்தளம் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி நிராகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்


நாடளாவியரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக மதுபானசாலைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது.


இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் மதுபான விற்பனையாளர்களின் வருவமானமும் தடைப்பட்டுள்ளது.


மதுபானத்தினை நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றார்கள்.
இன்னிலையில் சுப்பர் மாக்கட்டுக்களில் இருந்து ஒன்லைன் மூலம் பெருட்களை பெற்றுக்கொள்வோர் அந்த முறைமை ஊடாக மதுபானத்தினையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதாக அதெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் ஒன்லைன்மூலம் மதுபானத்தினை விற்பனை செய்வதற்கு மதுவரித்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது இதற்கு நிதி அமைச்சு அனுமதியளித்துள்ள நிலையில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி நிராகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்

Leave A Reply

Your email address will not be published.