மீனவர் அடித்து கொலைசெய்யப்பட்டிருக்கலாம் மக்கள் தகவல்!

0 302

10.06.21 அன்று ஆனந்தபுரத்தினை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவன் நந்திக்கடலில் தொழிலுக்கு சென்றவேளை காணாமல் போன நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளது.


இவரது உயிரிழப்பு தொடர்பில் கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
நந்திக்கடலில் கூடு கட்டி இறால் தொழிலில் ஈடுபடும் குறித்த குடும்பஸ்தர் கிராமத்தில் மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக கொரோனா காலத்திலும் தான் பிடிக்கும் மீனினை உணவு இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுத்து தானம் வாழும் மனிதன் ஏற்கனவே நந்திக்கடல் பகுதியில் கூடு கட்டும் தொழிலாளர்களுக்கும் இவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது


 கிராமத்தில் கசிப்பு காச்சுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை தட்டிக்கேட்ட நிலையில் பலரின் எதிர்பினை சந்தித்த மனிதாக காணப்பட்டுள்ளது.


இவர் ஒரு பிரச்சினையின் போது பொலீஸ் நிலையம் சென்றபோது தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

எவரிடமும் வில்லத்தனத்திற்கு செல்லா சிறந்த மனிதனாக காணப்பட்டாலும் ஆனந்தபுரம்,பச்சைப்புல்மோட்டை,நந்திக்கடல் பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களால் இவருக்கு அச்சுறுத்தல் இருப்பது அயலவர்களுக்கு தெரிந்த விடைமாக காணப்படுகின்றது.


இன்னிலையில் திட்டமிடப்பட்டு இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கிராம மக்களின் சந்தேகம் வலுக்கச்செய்யும் முகமாக இவரின் உடலம் காணப்பட்டுள்ளது.

உடலத்தில் தலையில்அடிகாயங்கள் முதுகில் அடிகாயங்கள்,உந்துருளி செல்லும் பாதையினை விட வேறு இடத்தில் விழுந்து கிடக்கின்றமை தலையில் போடப்பட் கெல்மட் கொக்பண்ணாத நிலையில் காணப்பட்டது என சந்தேகம் கொள்ளவைத்துள்ளது.


இவரது உடலம் தொடர்பிலான பிரோத பரிசேதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரித்தபோதிலும் இவரது உடலம் நாளை 12.06.21 அன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவரது கொலை தொடர்பில் பொலீசார் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.