வன்னி மாவட்டங்களுக்கு இந்த வாரத்திற்குள் தடுப்பூசி!

0 111

வன்னி மாவட்டங்களுக்கு ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் ஈடுபட்டுள்ளார்


இது தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடைத்தொழில்சாலையொன்றில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா தொற்றுபெருந் தொற்றாக பரவல் காராணமாக இத்தாக்கம் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ளது.


மன்னார் மாவட்டத்தில் கடற்nhழில் செய்யும் தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுவதால் இந்த மீனவர்கள் இந்தியபெருங்கடலின் எல்லையுடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாலும் இந்தியாவில் காணப்படும் இத்தொற்று சிலவேளை பரவக்கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

வடமாகாணத்தின் கேந்திரநிலையமான வவுனியா மாவட்டத்திலும் 3000 த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்யும் பாரிய ஆடைத்தொழில்சாலை ஒன்று அமையப்பெற்றுள்ளது.
ஏனைய மாவட்டங்களுடன் ஏ9 வீதியும் அதிக தொடர்புகளை கொள்ளக்கூடிய போக்குவரத்து கேந்திரநிலையமாக காணப்படுவதாலும் தொற்று பரவலலுக்கான கூடுதலான சாத்தியக்கூறுகள் காணப்படும் தளமாக வவுனியா நகரம் காணப்படுகின்றது.


இன்னிலையில் வன்னிக்கும் தடுப்பூசி தேவைஎன நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டகோரிக்கைக்கு பின்னர் இடம்பெற்ற கல்நதுரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வன்னியில் மூன்று மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் இந்வாரம் முதல் முதற்கட்டமாக வழங்குவதற்கு ஒப்புதலை அமைச்சு வழங்கியுள்ளதாக காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.