யாழ் கந்தரோடையில் கொள்ளை நால்வர் காயம்-மூவர் கைது!

0 57

யாழ்ப்பாணம் சுண்ணாகம் கந்தரோடைப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தின் போது மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளார்கள்.


இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை சுன்னாணம் பொலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

இன்று அதிகாலை மூகத்தினை மூடியவாறு கோடலி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பெண்கள் உள்ளிட்டவர்களை தாக்கியுள்ளதுடன் பெண்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.