படையினர்,பொலீசார்,பிராந்திய சுகாதர பணிமனையினரின் கண்காணிப்புக்கு மத்தியில் தீர்த்தம் எடுக்கப்பட்டது!

0 134

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மல் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுக்கான கடல் நீரிர் தீர்த்தம் எடுக்கும் பாராம்பரிய நிகழ்வு இன்று 17.05.21 நடைபெற்றுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் கடல்நீரில் தீர்த்தம் எடுத்துள்ளார்கள்.


தீர்த்தம் எடுக்க செல்பவர்கள் பொது சுகாதாரபரிசோதகர்கள் மற்றும் பொலீசாரிக்கு விபரம் கொடுக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பாரம்பரியங்கள் எதுவும் இன்றி தீர்த்தம் எடுத்துள்ளார்கள்முன்னதாக முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுப்பதற்காக கிரியைதாரர்கள் உள்ளிட்டவர்கள் பூசை வழிபாடுகளுடன் சென்றுள்ளார்கள்.


பக்த்தர்களின் வரவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார்,பொதுசுகாதரபரிசோதகர்கள்,இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபட்டு மக்கள் கூட்டத்தினை கூடாதவாறு கட்டுப்படுத்தியுள்ளார்கள்.


நடைபயணமாகவே கிரியைதாரர்கள் தீர்த்தம் எடுக்க செல்வது வழமை மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் முகமாக இம்முறை உழவியந்திரத்தில் சென்று தீர்;த்தம் எடுத்துள்ளார்கள்.
தீர்த்தம் எடுக்கும் தீர்த்தக்கரையில் மக்கள் மற்றும் பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு படையினர் பொலீசார்,பிராந்திய சுகாதார பணிமனையினர் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

எடுக்கப்பட்ட தீர்த்தம் முள்ளியவளை காட்டுவிநாயாகர் ஆலயம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பூசை வழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை 24.05.21 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்விற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.