ஆடைத்தொழில்சாலை கொத்தணியால் முடங்கியது முல்லைத்தீவு!

0 604

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோன தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருபு;பு,முல்லைத்தீவு,முள்ளியவளை பொலீஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.


புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள ஆடைத்தொழில்சாலையில் சுமார் 1500 வரையான பணியாளர்ள் பணியாற்றி வருகின்றார்கள் இவர்களில் இதுவரை 327 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இன்னிலையில் மே 18 நாளான இன்று மறுபக்கத்தில் போரில் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ள நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதுடன் அதனை முடக்கம் செய்யும் செயற்பாடாகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.


ஆடைத் தொழில்சாலை கொத்தணி இன்னும் பல நூற்றுக்கணக்கான தொற்றாளர்களை உருவாக்கலாம் என்ற அச்த்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்த மக்களை மக்கள் நினைவிற்கொள்வார்கள் என்ற அச்சத்தில் போடப்பட் அத்தனை கொரோனா நோய்த்தடுப்பு சட்டங்களையும் புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழில்சாலைக்கு போட்டிருந்தால் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள் என்ற உணர்வில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.