முல்லை ஸ்டார் கலைஞர்கள் கௌரவிப்பு!

0 67


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதயில் அமைந்துள்ள முல்லை ஸ்டார் இசைக்கலைஞர்களின் ஒராண்டு பூர்த்தி நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும் இன்னிசை நிகழ்வும் குரவில் தமிழ் வித்தயாலயத்தில் நடைபெற்றுள்ளது.(17.04.21)


இசைக்குழுவின் இயக்குனர் ந.நவச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,விநோனோகராதலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் ஸ்ரீசபாரத்தினம் அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் க.கணேசகுமாரன்,தமிழர்குடில் இலங்கைக்கான ஊடகவியலாளர் இ.உதயகுமார்,கலைஞர் யோ.புரட்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன் போது பிரமவிருந்தினர்கள்,சிறப்பு விருந்தினர்களால் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.