எதுவித உதவிகளும் அற்ற நிலையில் புகையிரத கடவை காப்பாளர்கள் மனநிலை பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்!

0 35

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றெகான் ராஜ்குமார் முல்லைத்தீவில் வைத்து 23.03.21 அன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.


இதன்போது கடந்த 16ஆம் திகதி தலைமன்னாரில் இடம்பெற்ற பேருந்து கடவை விபத்தினை தொடர்ந்து கடவை காப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவந்துள்ள நிலையில் இரண்டு புகையிரத கடவை நிலையத்தினை சேர்ந்த 6 காப்பாளர்கள் பணிவிலகல் கடிதத்தினை பொலீஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் 
அவர் மேலும்  தெரிவிக்கையில்..


கடந்த 16 ஆம் திகதி தலைமன்னாரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கும் அவனின் குடும்பத்திற்கு அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம் இந்த விபத்தானது புகையிரத திணைக்களத்தின் முழுமையான பொறுப்புக்கூறலேயாகும்.
வடக்கு கிழக்கு எங்கம் புகையிரதகடவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களத்தின் நேர அட்டவணை வழங்கப்படுவதில்லை புகையிரத சமிக்ஞையினை காண்பிக்கும் சிறப்பு,பச்சை நிற கொடிகள் வழங்கப்படவில்லை 
2013 ஆம் ஆண்டு 180 நாட்கள் அரச சேவையில் பணியாற்றி இருந்தால் சேவையில் நிதந்தரநியமனம் வழங்கப்படும் என்ற சட்டத்திற்கமைய உள்வாங்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்களுக்கு நாளாந்தம் 250 ரூபாவினை பொலீஸ் திணைக்களம் ஊடாக வழங்கப்படுவதுடன் எமக்கான முழுமையான பராமரிப்பு பொலீஸ் திணைக்களே பொறுப்புக்கூறுகின்றன.

வடக்கு கிழக்கில் 145 புகையிரத கடவைகளில் 450ற்கும் உட்பட்ட ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள் வடக்கு கிழக்கில் சுமார் 25 கடவைகள் முழுமையாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது காரணம் 250ரூபா சம்பளம் பொலீசாரின் அச்சுறுத்தல்கள் பழிவாங்கல்கள் போன் செயற்பாடுகளால் ஊழியர்கள் இடைவிலகியுள்ளார்கள்.


அரசினால் ஊழியர் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் முன்வைக்கப்படுவதி;ல்லை கொட்டகை வசதிஇல்லை,மின்சாரவசதி இல்லை,குடிநீர்வசதியில்லாத நிலையில் கடவைகள் பழுதடைந்துள்;ள நிலையிலும் பெரும்பாலான இடங்களில் தடைகளே இல்லை ஊழியர்களே தங்கள் கையினால்தான் சைகையினை காட்ட வேண்டும்.புகையிரதம் வருகின்றது என்று சொன்னால் கண்ணால் கண்டு அல்லது அதன் சத்தத்தினை காதால் கேட்டுதான் பாதுகாப்பினை வழங்குகின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.