பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்!

0 97

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கு எழுத்து மூலமாக சமர்ப்பித்து உள்ளதாகவும் இன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வின்போது தான் உத்தியோகபூர்வமாக பதவி விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்

பிரதேச சபை தேர்தல் நிறைவடைந்த பின்னர் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.