மாங்குளத்தில் அமைந்துள்ள சுமன விகாரை யாருக்கு தெரியும்!

0 57

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள விகாரையின் பெயர் வன்னியில் பலபேருக்கு தெரியாத நிலையில் அதன் பெயர் சுமன விகாரை என்பதாகும்.

முல்லைத்தீவு மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நான்கு வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 12மாதவிளக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சர்வமத வேலைத்திட்ட நிகழ்வு மாங்குளம் சுமன விகாரை மற்றும் முறிப்பு பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டிடங்களில் நடைபெற்றுள்ளது.


சர்வமத வழிபாட்டிடங்களான இந்து ஆலயம், கிறிஸ்தவ வணக்கஸ்தலம், முஸ்லீம் பள்ளிவாசல், பௌத்த மத வணக்கஸ்தலம் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்குபற்றலுடன் ஆசீர்வாத பூஜை வமிபாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக இந்து ஆலயத்தில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.