PCR ஐ புறக்கணித்த பருத்தித்துறை பஸ் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல்

0 59

PCR பரிசோதனையை புறக்கணித்தமையால் வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்க்கு பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையால் சீல்வைக்கப்பட்டது.
பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையால் பிரதேசத்திலுள்ள அதிக ஆபத்து நிலைக்குரியவர்களை இனங்கண்டு அவர்களுக்கான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வர்த்தகர்கள், சாரதிகள், வாகன சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் ஆபத்து பிரதேசங்களிலிருந்து திரும்புவேர் என முன்னிலைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று திங்கட்கிழமை PCR பரிசோதனைக்காக குறித்த வாகன சுத்திகரிப்புநிலைய ஊழியர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பரிசோதனைக்கு சமூகமளிக்கவில்லை. இதுதொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் அவ்விடம் சென்று பரிசோதித்தபோது அதன் உரிமையாளர் மதுபோதையில் காணப்பட்டதோடு ஊழியர்களும் அங்கே பிரசன்னமாயிருந்தனர். எனவே கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்க மறுத்து பீசிஆர் பரிசோதனையில் பங்குபற்றாமையினால் அடுத்து PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் கிடைக்கும் வரை அந்த நிறுவன செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதி மற்றும் நடத்துநரும் PCR பிசோதனைக்கு
உட்படுத்த பணிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார திணைக்களத்திற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் இவற்றை மீறும் வகையில் செயற்படுவோர் மீது 1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படு்ம் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.