சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா

0 12

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.