கிளிநொச்சியில் கடந்த 9 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலைமையில்!

0 2

கடந்த 9 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல் பாகங்கள் செயலிழக்க ஆரம்பித்துள்ளமையால் உண்ணாவிரத இடத்தில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளதாகத் ;தெரிவித்து 04.01.2021 கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் நியமித்த நியமன இயங்குநர் சபையினை இரத்துச் செய்யவேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அவர்களின் குடும்ப நிலைமைகளை கருதி ; தற்போதுள்ள இயக்குநர் சபையை மீளவும் இயங்க விடுதல், சங்கத்தின் கிளைக்குழு தேர்தலை நடாத்தி புதிய இயக்குநர் சபையினை உருவாக்குதல் போன்ற ; மூன்று கோரிக்கைகளை வைத்து கடந்த 12.01.2021 தொடக்கம் உண்ணாவிரதம் போராட்டத்தில் இரண்டு தொழிலாளிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 9 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உடல் பாகங்கள் செயலிழக்க ஆரம்பித்துள்ளமையால் உண்ணாவிரத இடத்தில் இன்றையதினம் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.