வெளிநாடுகளிலிருந்து மேலும் 609 பேர் நாட்டிற்கு வருகை

0 13

வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று (20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கட்டார் நாட்டிலிருந்து 110 பேரும், சவூதியிலிருந்து 76 பேரும், இந்தியாவில் இருந்து 55 பேரும், மாலை தீவில் இருந்து 28 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக கொவிட் – 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினத்திற்குள் 340 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். தென் கொரியாவிலிருந்து 285 பேரும், சவுதியிலிருந்து 21 பேரும், சீனாவில் இருந்து 23 பேரும், சிங்கப்பூரில் இருந்து 3 பேரும், பங்களாதேஷிலிருந்து இருவரும், மாலை தீவில் இருந்து 6 பேரும் இவ்வாறு வருகை தரவுள்ளனர்.

அத்துடன் 96 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 8188 பேர் மேலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் – 19 வைரஸ் பரவல் தடுப்புக்காண தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.