புற்றளை பகுதி ஆசிரியருக்கு கொரோனா பலர் சுயதனிமைப்படுத்தலில்..

0 27

பருத்தித்துறை புற்றளை பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் முடிவெட்டும் கடை மூடப்பட்டதுடன், பணியாளர்கள், முடிவெட்ட வந்தவர்களை பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பருத்தித்துறை புற்றளை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். சுய தனிமைப்படுத்தப்பட்ட மூவரில் பண்டாரவளையில் ஆசிரியராக கடமையாற்றிய ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 23ம் திகதி பண்டாரவளையில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ்ப்பாணத்திருந்து 750 பேரூந்தில் பயணம் செய்துள்ளார். கடந்த 4ம் திகதி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் சிகையலங்காரம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.