Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

jaffna

புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு முச்சக்கரவண்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு முச்சக்கர வண்டியினை வாழ்வாதாரமாக வழங்கிவைத்துள்ளார்கள். தாய்த்தமிழ்பேரவையின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் செரீனா. தவேந்திரம் அவர்களின் நிதி அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவர் மாற்றுத்திறனாளியான நிலையில் அவரது மனைவி ஒரு காலை இழந்த நிலையிலும் உள்ள குடும்பம் ஒன்றிற்காக…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.  இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது. ஆலயப் திருப்பணி வேலைகளை…

மடு அன்னையினை வரவேற்க தயாராகும் முல்லைத்தீவு மாவட்டம்!

மடு அன்னையின் வருகையினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அலங்கார பணிகள் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 27 ஆம் திகதி மடு அன்னை கிளிநொச்சி வழியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் இதனை வரவேற்கும் முகமாக உடையார் கட்டு பகுதியில் வரவேற்பு பளைவு அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன்.புதுக்குடியிருப்பில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பான அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சரின் வருகை!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரா தலைமையில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்று எதிர்வரும் வைகாசி மாதம் 03,04,ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கீழ் குறிப்பிடும் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெறுமதியான…

புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புரண்டது!

புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புரண்டது! முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தில் ஈடுபட்ட வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து தடம் புரண்டுள்ளது. இந்த சம்பவம் இன்று 23.04.2024 மாலை இடம்பெற்றுள்ளது.முள்ளியவளையில் இருந்து சட்டத்திற்கு முரணாக தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்று புதுக்குடியிருப்பு பகுதியில் முகவரியாக கொண்ட சிறிய ரக வாகனம் கேப்பாபிலவு இராணுவ…

வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு!

வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகதை ஒட்டி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக  விஞ்ஞாபனம் எதிர்வரும் 22. 4 .2024 நாளை  காலை 9.27 முதல் 10.27 வரை உள்ள…

70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

விதையனைத்தும் விருட்சமே அமைப்பினால்  முல்லைத்தீவு மாவட்டத்தில்  தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது  கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே என்ற தொனிப் பொருளிலே ஆரம்பிக்கப்பட்ட  செயற்றிட்டத்தில்  தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றாக…

ஊடகவியலாளரின் நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்த அரச உத்தியோகத்தர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். 22.04.2024 இன்று மாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக திரண்ட பிரதேச செயகல ஊழியர்கள் அனைவரும் கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள். ஊடக தர்மத்தினை தனிநபரின் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதா,கௌரவமான…

மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில்…

வடக்கில் வீடுகளில் தங்குமிடசேவை வழங்குனர்களுக்கு ஆளுனரின் அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண…