Thursday, July 17, 2025
HomeJaffnaஅமைச்சர்கள் ஒவ்வொருவரின் வாக்குறுதியும்-வக்காளத்து வாங்கும் மீனவர்களும்!

அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வாக்குறுதியும்-வக்காளத்து வாங்கும் மீனவர்களும்!

இலங்கையில் வடக்கு கடலில் குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள் முழுமையாக அவை கட்டுப்படுத்த படவில்லை இந்த நிலையில்தான் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் கோரிக்கையும் அமைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களும் காலத்திற்கு காலம் போராட்டம் கோரிக்கை அமைச்சர்களின் வாக்குறுதிகள் என பலவற்றை கண்டு வந்துள்ளார்கள் ஆனால் இதுவரை முல்லைத்தீவு கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுபடுத்த கடற்படையினரோ,கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரோ முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை காலத்திற்கு காலம் சில படகுகளை கைதுசெய்து வருகின்றார்கள்.

ஆனால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது இந்த நிலையினை மாற்றி அமைக்கவேண்டும்.


முல்லைத்தீவு கடலில் அதிகளவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் கொக்கிளாய்,புல்மோட்டை பகுதியினை சேர்ந்த மீனவர்களே அவர்கள் திருகோணமலை கடலில் இருந்து வருகைதருகின்றார்கள் இதனை விட முல்லைத்தீவினை சேர்ந்த சில மீனவர்களும் சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் காலத்திற்கு காலம் வரும் கடற்தொழில் அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு நன்றி சொல்வதும் பின்னர் அவர்களுக்கு வக்காளத்து வாங்கி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதுமே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் இதற்கு முன்னர் கடற்தொழில் அமைச்சாரக இருந்தவர்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்கள் அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்று சிந்தித்துபாருங்கள்.
அது தொடர்பிலான செய்தியாக நாங்கள் இதனை பார்கின்றோம்.

கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூன் 25) மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரும் கலந்துகொண்டனர். மீன்பிடி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களும் இக்கூட்டத்தில் பரந்துபட்ட அளவில் பங்கேற்றன.

இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர்.

உள்நாட்டு சட்டவிரோதச் செயல்கள்: உரிமம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகள் போன்ற அழிவுகரமான முறைகளைப் பயன்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகளால் சிறிய மீன் குஞ்சுகள் கூட அழிக்கப்படுவதால், எதிர்கால வளங்களுக்கு சேதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதுவரை இடம்பெற்ற அனைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே வலியுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி இவ்வாறு கருத்து தொரிவித்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments