Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Eliphant

மக்களின் வாக்கினை சிதறடிக்கவே பொது வேட்பாளர் !

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் மரபுரிமை கட்சி அறிக்கை  நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முல்லைதீவு மாவட்டத்தில் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழர் மரபுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இதுவரை காலமும் எமது வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலை மக்களின் எதிர்பார்ப்புகள் அபிலாசைகள் கோரிக்கைகளை நிறைவேற்றும்…

வள்ளிபுனத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் 6 பேர் கொண்ட மாணவகுழு கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முடித்து வெளியேறிய மாணவர்கள் மீது வெளியில் இருந்த வந்த மாணவ குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று 25.07.2024 மாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியினை…

யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா!

யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா! சேகுவரா என அடையாள்படுத்தப்பட்ட ஒரு துடிப்பான இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதியில் உயிரிழந்த நிலையில் உடலமாக இன்று 25.07.2024 மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டினை பிறப்பிடமாகவும் வவுனியாவினை வசிப்பிடமாகவும்கொண்ட சோமஸ்ராஜா (சேகுவரா,இசைப்பிரியன்) என அழைக்கப்படும் இளைஞன் சுயாதீன  ஊடகவியலாளராகவும்…

வவுனியாவில் இடமாற்றம் செய்யப்படும் பாஸ்போட் அலுவலகம்!

வடக்கு மாகாண மக்களுக்காக இயங்கிவந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் தற்போதைய முகவரியில்…

கமக்கார அமைப்பு செயலாளர் மீது துப்பாக்கிசூடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில்24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த…

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் இந்தியாவிற்கு தப்பிஓட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 அகவை சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா கடந்த யூன் மாதம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிதெரியவருகையில் 14 அகவையுடை சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில்…

பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்!

பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் உள்ள விடுவமடு மகாவித்தியாலத்தில் கல்வி கற்றும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் ஊடாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசுவமடு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் ஆசிரியர் ஒருவருக்கு…

தேசியத்தில் சாதனைபடைத்த முத்தையன்கட்டு ஜீவநகரை சேர்ந்த மாணவன் ஜெ.விதுஷன்

தேசிய மட்ட தடகளப்போட்டியில் முல்லைத்தீவு மாணவன் சாதனை! 2024 ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கைக பாடசாலைகளுக்கிடையிலான  கனிஸ்ர மெய்வல்லுனர் தடகளப்போட்டியில் 3000 ஆயிரம் மீற்றர் நீண்டதூர ஓட்டப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் கல்விகற்று வரும் ஜெ.விதுஷன்  முதல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். அவர்கள் 14.07.2024 அன்று இந்த போட்டி…

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் சமுகத்துக்கு அமைச்சர் மனுச அழைப்பு!

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் சமுகத்துக்கு அமைச்சர் மனுச அழைப்பு பிரச்சினைகளற்ற இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் சமுகத்துக்கு அமைச்சர் மனுச அழைப்பு கிளிநொச்சி – ஜெயகாமு இலங்கை நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தார் “எமது புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்து இலங்கையை அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் புலம்பெயர்…

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

போராட்டத்தின் மூலம் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது தனது தொழிலை தாமே கைவிட்டதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படும் என முதல் ஆயிரம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதை அறிந்த புகையிரத தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர் என தொழிள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…