Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது!

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் 2023 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப்போட்டி 22.08.23 இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆராம்பித்து குமுழமுனை மாகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்துள்ளது.

21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மரதன் ஓட்டப்போட்டியில் வலயமட்டத்தில் தெரிவான பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதனை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடத்துவதற்கான முழுமையான நிதி அனுசரணையினை கனடாவில் வசித்துவரும் முல்லைத்தீவு குமுழமுனையினை சேர்ந்த கந்தசாமி பத்மநாதன் அவர்கள் வழங்கி இருந்ததுடன் முதல் இடம் பிடித்த ஆண்பெண் இரு வீரர்களுக்கும் தங்க பதங்கத்தினையும் வழங்கிவைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியின் தொடக்க நிகழ்வினை நிதி அனுசரணையாளரான கந்தசாமி பத்மநாதன் அவர்கள் கொடி அசைத்து தெடக்கிவைத்துள்ளதை தொடர்ந்து பெண்களுக்கான போட்டியின் தொடக்கத்தினை ஒட்டுசுட்டான் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கை.சுதர்சன்,கந்தசாமி பத்மநாதன், உள்ளிட்டவர்கள் தொடக்கிவைத்துள்ளார்கள் 

முல்லைத்தீவு மாவட்ட செயலகமுன்றலில் இருந்து வட்டுவாகல் சப்த்த கன்னிகள் ஆலயத்தினை சென்று அங்கிருந்து நீதிமன்ற வீதி ஊடாக சிலாவத்தையினை சென்றடைந்து அளம்பில் சந்தி ஊடாக குமுழமுனை மகாவித்தியாலத்தில் நிறைவுபெற்றுள்ளது.

வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு குமுழமுனை மகாவித்தியால மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மாகாண கல்வித்திணைக்களத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் முல்லை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்,வைத்தியகலாநிதி,கோட்டக்கல்வி அலுவலகர்,பாடசாலை அதிபர்கள் மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

வடமாகாணத்தில் உள்ள 13 வலயங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளார்கள்.இதில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையினை சேர்ந்த கிளிநொச்சி குமுழமுனையில் வசிக்கும் எஸ்.கிரியன் முதல் இடம்பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்று சாதனை படைத்துள்ளான்பெண்கள் பிரிவில் புங்குடுதீவுமத்தியகல்லூரி பாடசாலையினை சேர்ந்த அமல்கா முதல் இடம்பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மரதன் ஒட்டத்தினை ஓடி முடித்த முதல் பத்து இடங்களை பெற்ற வீரர்களுக்கு சான்றிதழும் கேடயமும் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *