Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News

வடக்கு கிழக்கில் தொல்லியல் (பௌத்த) அடையாளங்கள்!

வடக்கு கிழக்கில் தொல்லியல் (பௌத்த) அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சைவ ஆலயங்கள்.

●ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்

●மாந்தைகிழக்கு பத்திரகாளி அம்மன் கோவில்

●சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில்

●குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்

●பாண்டியன்குளம் சிவன் கோவில்

●வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில்

●குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில்

●மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில்

●மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில்

●ஒதியமலை வைரவர் கோவில்

முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில்

●தென்னமரவடி கந்தசாமிமலை கோயில்

●செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்

●புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்

●வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்

●சூடைக்குடா மலைப்பகுதி முருகன் ஆலயம்

●திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம்

●மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,

சிவபுரம் சிவாலயம்,

●மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில்

●குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்

●ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில்

●கல்லுமலை பிள்ளையார் கோவில்

●மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்

●மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை

●குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில்

●மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம்

●கன்னியா வெந்நீர் ஊற்று

●உருத்திரபுரம் சிவன் கோவில்

●குசலமலை சைவ குமரன் ஆலயம்

●காங்கேசன்துறை சைவ ஆலயம்

●கீரிமலை சிவன் ஆலயம்,

●சடையம்மா மடம்,

●காங்கேசன்துறை முருகன் ஆலயம்

●வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம்

●நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலயம்

●சுழிபுரம் பறாளை முருகன் கோவில்

மேற்படி ஆலயங்களில் சில சிதைக்கப்பட்டு இருக்கின்றன .

அதே போல சில ஆலய சூழலுக்குள் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.

இது தவிர, 823/73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16 ஆம் பிரிவின் கீழ் 2013 ஆம் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் வடக்கு கிழக்கில் 98 ற்கு மேற்பட்ட இடங்களில் தொல்லியல் சிதைவுகள் இருப்பதாக உரிமை கோரி இருக்கின்றார்கள்.

அதே போல வடக்கு கிழக்கின் நிலமட்டத்திற்கு உயரமான மட்டக்களப்பு மாவட்ட நிலப்பரப்புக்கு உரிய தொப்பிகல (குடும்பிமலை), தாந்தாமலை மலை, குசலானமலை

திருகோணமலையின் ராஜவந்தான் மலை, சூடைக்குடா மலை, அரிசி மலை போன்ற பகுதிகள் எங்கும் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள்.

இது போதாதெதென்று அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் மேற்குறித்த இடங்கள் உள்ளடங்கலாக

74 இடங்களை பௌத்தமதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள்.

அதே போல மட்டக்களப்பில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *