Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் இப்படியும் வீதிகள்!

உரிய வடிகால்கள் இன்றி வீதிகளில் பாயும் வெள்ளநீர்! பாடசாலை செல்லமுடியாது தவிக்கும் மந்துவில் கிராம மாணவர்கள் 
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு  மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மந்துவில் கிராமத்தில் அமைந்துள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலையை சூழ உள்ள கிராமத்தின் மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான வீதிகள் அனைத்திலும் வெள்ளநீர் பாய்வதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த மந்துவில் கிராமத்தினுடைய வீதிகளில் உரிய  வடிகால் அமைப்புகள் இல்லாமையாலும் மீள் குடியேற்றத்தின் பின்னர் சுமார் 14 ஆண்டுகளாக இன்று வரை எந்த திருத்த பணிகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்ற நிலைமையிலும் வடிகான்களில் ஓட வேண்டிய நீர் பிரதான பாதைகள் ஊடாகவே ஓடி வருகின்றது எனவே பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் முதல் வயோதிபர்கள் மாற்றுத்திறனாளிகள் என  பலரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்

தொடர்ச்சியாக பல தடவைகள் புது குடியிருப்பு பிரதேச சபையினருக்கு இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியும் பிரதேச சபையினுடைய தவிசாளர் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து குறித்த இடங்களை காண்பித்து இருந்த போதும் இன்று வரை இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

நீர் வடிந்தோடுவதற்கான  உரிய வடிகான்களை அமைத்தால் குறித்த வீதிகளுடாக வெள்ளம் ஓடாவிட்டால் கூட பாடசாலை மாணவர்கள் வீதியால்  செல்லக்கூடிய நிலைமை காணப்படும் எனவும் தற்போது வெள்ள நீர் முழுவதுமாக வீதிகளால் செல்கின்ற நிலைமையிலே பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் சப்பாத்து அணிந்து செல்லவோ அல்லது பாடசாலைக்கு செல்வதற்கு பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்

எனவே பிரதேச சபையினர் மிக விரைவாக குறித்த பகுதியில் உரிய வடிகான்களை சீரமைத்து பாடசாலை மாணவர்கள் பாடசாலை சென்று வருவதற்கும் பொது மக்களினுடைய போக்குவரத்துக்கும் ஏற்ற வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

14 ஆண்களாக தாம் தொடர்ச்சியாக கோரிக்கை விட்டு வருகின்றபோதும் இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் இதன் பின்னர் ஆவது இந்த வீதிகளுக்கு ஒரு விமோசனம் கிடைக்க வேண்டுமென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது

குறித்த பகுதிகளில் நீர் தேங்கி ஓடுவதற்காக பிரதானமான காரணமாக புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு  ஏ 35 பிரதான வீதி ஓரத்திலே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய வடிகால் அமைப்புகள் செய்யப்படாமல்  இருப்பதால் குறித்த பகுதிகளில் நீர் தேங்குவதால் இங்குள்ள நீர் விரைவாக வடிந்த ஓடாமல் இருப்பதாகவும் எனவே அந்த வீதியோடத்தில் இருக்கின்ற வடிகான்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  உரிய வகையில் புணரமைக்கின்ற போது குறித்த பகுதிகளில் உள்ள நீர் விரைவாக வடிந்து ஓடக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் தற்காலிகமாக தங்களால் அந்த பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கான எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக அவதானித்து அது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்

இது தொடர்பாக வீதி அதிகார சபையின்  நிறைவேற்று பொறியியலாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்படுகின்ற நிலைமையில் புது குடியிருப்பு நகர பகுதியில் வெள்ள நிலைமைகளுக்கான வேலைத்திட்டங்களுக்காக 100 மில்லியன் பெறுமதியான வேலை திட்டமொன்று முன்னெடுக்கப்பட வுள்ளதாகவும் குறித்த மந்துவில் பகுதியினுடைய வெள்ளம் வடிந்து ஓடக்கூடிய வகையிலே வருகிற வருடத்தில் தாங்கள் அதற்கான ஒரு நிரந்தர வடிகான்களை வெட்டிவிடுவதாகவும்  தற்காலிகமாக வெள்ள நீரை வெளியேற்றக்கூடிய வாய்ப்புகளை அவதானித்து அது தொடர்பில் செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *