Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

தையல் பயிற்சியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியாதீபம் கல்வி மற்றும் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தையல் பொருட்கள் கட்காட்சியும் 08.07.23 சனிக்கிழமை இணைப்பாளர் லிகிர்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பதில் மாவட்டசெயலளர் க.கனகேஸ்வரன்அவர்களும்,சிறப்பு விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன்,ஒட்சுட்டான் சுகாதாரவைத்திய அதிகாரி கை.சுதர்சன் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் அயல் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

தாய்நாட்டில் நலிவுற்ற எம் தற்சார்பு பொருளாதாரத்தினை கட்டி வளர்க்கவேண்டும் என்பதற்காக சுவீஸ் நாட்டில் உள்ள புலம் பெயர் மக்களால் உருவாக்கப்பட்ட வித்தியாதீபம் (சுவீஸ்) என்ற பயிற்சி நிலையத்தில் கையல் பயிற்சியினை ஆசிரியர் ந.ஜெயானந்தவதான அவர்கள் வழங்கி இருந்தால் இதில் ஆறு மாத்திற்கு மேற்பட்ட பயிற்சியினை முழுமை பெற்ற 18 மாணவர்களுக்கு சான்றிழ்கள் பிரதமவிருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  பூதன்வயல் கிராமத்தில் அமைந்துள்ள தண்ணிமுறிப்பு அ.தா.க.பாடசாலையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் நிர்வாக தேவைக்காக மடிக்கணணி மற்றும் அலுவலக பொருட்கள் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கிவைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வினை தொடர்ந்து தையல் பயிற்சியினை நிறைவுசெய்த மாணவர்களினால் தைக்கப்பட்ட ஆடைகள்விற்பனை நிலையமும் பிரமுகர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *