Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த பெரும்பான்மை மீனவர்கள் கண்டுகொள்ளாத ஒட்டுசுட்டான் பொலீஸ்!

கடந்த 05.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தமிழ் மீனவர்களின் எந்த அனுமதியும் இல்லாமல் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து  மீனவர்களுக்கும் பெரும்பான்மை வெலிஓயா,கஜாபுரம்,பதவியா பகுதியினை சேர்ந்த 29 பெரும்பான்மை மீனவர்கள் தமிழ் மீனவர்களால் பிடிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்.

மீனவ சங்கங்களின் தீர்மானத்திற்கு அமையவே சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடித்த பெரும்பான்மை மீனவர்களை கைதுசெய்ததற்காக  18  தமிழ்  மீனவர்களை ஒட்டுசுட்டான்  பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இதேவேளை ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பெரும்பான்னை மீவர்கள் 9 பேரை பொலீசார் கொண்டுசெல்லும் போது தப்பித்து ஓடவிட்டுள்ளார்கள் அவ்வாறு பொலீசாரின் பிடியில் இருந்து ஓடிய பெரும்பான்மை மீனவர்களில் சிலர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் பார்வையாளராக வருகைதந்துமுள்ளதை தமிழ் மீனவர்கள் அவதானித்துள்ளார்கள்.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 47 மீனவர்களின் வழக்கு விசாரணை இன்று மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் விடுதலை செய்யப்பட்டால் மேலும் முரண்பாடுகள் தோற்றிவிக்கப்படும் என பொலீசாரால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்

அத்துமீறி சட்டவிரோதமாக பல கிலோமீற்றர் தொலைவிற்கு அப்பால் இருந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்கள் குளத்தில் மீன்பிடித்தார்கள் என்று பொலீசாரால் குற்றஞ்சாட்டப்படவில்லை எனபாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் முறைப்பாட்டினை ஒட்டுசுட்டான் பொலீசார் பதிவுசெய்யவில்லை என்றும் இலங்கையில் எங்கு வேணும் என்றாலும் மீனவர்கள் தொழில் செய்யலாம் என்று ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளார் தமிழ் மீனவர்கள் கலவரம் செய்தார்கள் என்று அபாண்டமான பழியினை சுமத்தில அவர்களை சிறையில் அடைத்துள்ளார்கள்.

இது பொலீசாரின் அராஜயகமான நடவடிக்கை சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் குறிப்பாக கடற்தொழில் அமைச்சு நன்னீர் மீன்பிடி சங்கத்தினரின் வாழ்வாதாரத்தினை கண்டு கொள்வதில்லை அட்டைக்குஞ்சு வளப்பதற்கும் வேறு கடல் தொழில் நடவடிக்கைக்குமாக தென்மாகாணம்,மேல்மாகாணங்களில் இருந்து ஆட்களை கொண்டுவந்து எங்கள் இடங்களில் விடுகின்றார்கள். ஆனால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை இதற்கு அமைச்சர்கள் தான் துணைபோகின்றார்கள்.

இந்த நிலையில் முறைப்பாட்டினை பதிவு செய்தவர்களை கலவரம் செய்தார்கள் என்று சிறையில் அடைத்துள்ளார்கள்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சென்று முறையிட தீர்மானித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *