Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள்!

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள் கண்ணீர் மல்க உறவுகளை நினைவுகூர்ந்தார்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.

பொலீசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வளாகத்திற்கான வளைவு பதாதையில் மாவீரர் என்ற பெயர் பதிக்ககூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்க அமைய அங்க மாவீரர் துயிலும் இல்ல பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில் இரணைப்பாலை துயிலும் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளைநினைவுகூர  பெருமளவான மக்கள் இன்ற(27) மாலை ஒன்று திரண்டார்கள்.

இதன்போது மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் முதல் விதைத்த மாவீரர் இசைஞானி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க தொடர்ந்து சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக நினைவுச்சுடர்களை பெற்றோர்கள் உறவினர்கள் ஏற்றிவைத்துள்ளார்கள்.
இதில் மக்கள் தங்கள் பிள்ளைகளின் திருவுருவப்படங்களை கொண்டுவந்து வைத்து வணக்கி சுடர் ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செய்துள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *