பாரம்பதியமாக நாம் வழிபட்டுவந்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தினை இனம் தெரியா விசமிகள் அழித்துவிட்டனர் இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
நம் இனம் நோக்கி ஏவப்பட்ட பல நூற்றாண்டு அடக்குமுறைகளின் இன்றைய வடிவமாகவே இதனை நாம் பார்க்கின்றோம் நாம் நம்பும் தெய்வங்களை நம் நம்பிக்கையின்படி வழிபடும் உரிமை அனைவருக்கும்உண்டு ஆனால் தமிழர்களாகிய நமக்கு இந்ததீவில் சுதந்திரமான வழிபாட்டு உரிமைகூட மறுக்கப்பட்டிருக்கின்றது இதனை கண்டித்து எதிர்வரும் 30.03.23 அன்று காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவில் தொடக்கம் மாவட்ட செயலகம் வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.