Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: March 2024

புதுக்குடியிருப்பில் பண்பாட்டுப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இலண்டன் கிளை என்பன இணைந்து புதுக்குடியிருப்பில் ஏற்ப்பாடு செய்துள்ள  புதுவை பண்பாட்டுப் பெருவிழா எதிர்வரும் 06.04.2024 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது  குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் மற்றும் இந்திய…

புதுக்குடியிருப்பில் ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு மிக சிறப்பாக நடைபெற்று வரும் நான்காவது ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தின் பழைய மாணவர்களால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இவ்வாண்டுக்கான  நான்காவது ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்  இன்று 31.03.2024 ஈஸ்டர் திருநாளில்  காலை 07.00…

புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் 29.03.2024 அன்று நடைபெற்ற மரணவீடு ஒன்றின் இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் பற்றி மேலும்…

விபத்தில் உயிரிழந்த  பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி!

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு  இன்று (30.03.2024) பிற்பகல் 12.30 மணியளவில்  இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட…

வீட்டு காணிக்குள் பைப்லையின் செய்து சாராய விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய பொலீசார்வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரதுகாணிக்குள் நீர் பொருத்தும் பைப்லையின் செய்த மாதிரி கோட உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி…

கொக்குளாய் பகுதியில் படகு இயந்திரங்களை திருடிய நபர்கள்!

முல்லைத்தீவு கொக்குளாய் புளியமுனைப்பகுதியில் கடற்தொழில் செய்துவரும் கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. புளியமுனை கடற்கரை பகுதியில் வாடியில் வைத்த இரண்டு படகுகளே இவ்வாறு 27.03.2024 அன்று இரவு களவாடப்பட்டுள்ளதாக 28.03.2024 அன்று கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் படகின் உரிமையாளரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.தலா 9 இலட்சம் பெறுமதியான…

மன்னாகண்டலில் மணல் வியாபாரி கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 28.03.2024 அன்று இடம்பெற்றுள்ளது குறித்த நபர் மன்னாகண்டல் பகுதி பேராற்று போன்ற பகுதிகளில் இருந்து ஒரு இடத்தில் மணலினை சேகரித்து…

உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தி உபகரணங்களுடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று…

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து புத்தபொருமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அரிசி!

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்புற நடைபெற்ற ”புத்தரிசி பெருவிழா” நிகழ்வு நெல் அறுவடை காலப்பகுதியில் விவசாயக் குடி மக்களால் முதல் அறுவடையில் பெறுகின்ற நெல்லை அரிசியாக்கி புத்த பெருமானுக்கு தானம் வழங்கும் வழக்காறு நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு 57 வது ”புத்தரிசி பெருவிழா”…

கள்ளப்பாடு தெற்கில் குடிநீர் திட்டத்தினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்!

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள பதின்மூன்று குடும்பங்களின் அத்தியாவசிய தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினையை இன்றைய தினம் (28) நிறைவேற்றியுள்ளனர். கள்ளப்பாடு மக்களின் பங்களிப்புடன் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்து இன்றை…