Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: January 2024

பெண்தொழில் முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் கண்காட்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் கிறிசலிஸ் நிறுவத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இணைந்து நடத்தும் சந்தைப்படுத்தல் கண்காட்சியும் விற்பனையும் நாளை 27.01.2024 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கிவிப்பதற்கும் உங்களுக்கு தேவையான உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்துகொள்வதற்குமான அரியவாய்ப்பா இது…

முல்லைத்தீவில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி!

முல்லைத்தீவு வலயத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை, குமுழமுனை மகாவித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 44 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியானது விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தினால் 22.01.2024 முதல் 26.01.2024 வரை ஐந்து நாட்கள் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது. மாணவர்களின்…

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் இடம்பெற்ற விபத்தல் இளைஞன் பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டாவாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 28 அகவைஉடைய க.நவீன் என்ற இளைஞன் படுகாயம்…

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு – 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல்!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல் அண்மையில்  கிளை மாநாட்டு மண்டபத்தில் கௌரவ கிளைத் தலைவர் Dr. க.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு.கே.பாலகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்….

தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்!

தமிழ் அரசியல் தலைமைகள் உடனடி கவனம் செலுத்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை. அனைத்து தமிழ் அரசியல் தலமைத்துவங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான கண்டுமணி லவகுசராசாவினால் இன்றைய தினம் (25.01.2024) ஊடகங்கள் ஊடாக வெளிப்படை ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்…

முல்லைத்தீவில் T- 56துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது!

முல்லைத்தீவு உடுப்புக்குளம்  பகுதியில் உள்ள தனியார் வீட்டு  காணி ஒன்றில் இருந்து நேற்று T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு  காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24.01.2024) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று தேடுதல்…

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 30 குடும்பங்களுக்கு நுளம்புவலை வழங்கி வைப்பு!

தன்னார்வ தொண்டாற்றும்  இளைஞர்கள் பலர்  இணைந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 30 குடும்பங்களுக்கு நுளம்புவலை வழங்கி வைப்பட்டுள்ளது விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஊடாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்திரன் றஞ்சிதமலர்     தம்பதிகளின் 6000 ரூபா நிதி பங்களிப்பில்  முல்லைதீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச…

உடையார் கட்டு முருகன் ஆலயத்தில் -தைபூச பூசை வழிபாடுகள்!

முல்லைத்தீவு உடையார் கட்டு முருகன் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தைபூச பூசை வழிபாடுகள் புதுக்குடியிருப்பின் உடையார்கட்டு பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் முருகன் ஆலயத்தில் தைப்பூச நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது. தைபூச திருநாளான இன்று 25.01.2024 உடையார்கட்டு முருகன் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க உபயதாரர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தின் பக்த்தர்கள் குருக்களுடன் உடையார்கட்டு…

முல்லைத்தீவில் இளைஞர்களுக்கான கருத்தரங்கு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கான கருத்தரங்கு ஒன்று 21.01.2024) சிறப்பாக இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அறிவுநதி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்களில் ஒன்றாக இளைஞர்களுக்கான இந்த கருத்தரங்கு (21) இடம்பெற்றது  இலங்கை செஞ்சிலுவை சங்க மன்டபத்தில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் ஊடகத்துறை மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு தொடர்பான கருத்தரங்காக இது இடம்பெற்றது குறித்த…

புதுக்குடியிருப்பில் யானையின் அட்டகாசம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று மக்களின் வாழ்இடங்களை சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 20.01.2024 இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்து காணிகளின் வேலிகளை நாசப்படுத்தியுள்ளதுடன் கைவேலி பகுதியில் அமைந்துள் கணேசா வித்தியாலயத்தின் மதிலினை உடைத்துக்கொண்டு யானை சென்றுள்ளது. இதனால் பாடசாலையின் முன்பக்கம் உள்ள ஒருபகுதி மாதில்…