Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: November 2023

முல்லைத்தீவில் முதுபெரும் கலைஞர் இயற்கை எய்தினார்!

முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த  தவில் வித்துவான் இன்றையதினம் இயற்கை எய்தியுள்ளார். முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். அன்னாரின் இறுதியாத்திரை நாளை (30.11.2023) காலை 10 மணியளவில்…

40 உடலங்கள் மீட்புடன் திடீரென நிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இன்றுடன்  நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் பிற்பகலுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது…

புதுக்குடியிருப்பில் கொள்ளை சம்பவத்துடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு போலீசார் கைது 28-11-23செய்துள்ளார்கள். 29அகவையுடைய கைவேலி பகுதியினைச் சேர்ந்த குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் இவரல் களவாடப்பட்ட 16 காஸ்சிலிண்டர்கள் ஒரு…

வவுனியா ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிடம் அமைத்துக்கொடுப்பு!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிட வசதி இல்லாத நிலையில் இயங்கிவந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் நிலம் மக்கள்  அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்தோரின் நிதிப்பங்களிப்புடன் முன்பள்ளிக்கான  கட்டிடம் அமைத்து முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த 22 மாணவர்கள் கல்விகற்று வரும் இந்த முன்பள்ளிக்கான கட்டிடங்கள்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இதுவரை 37 மனித உடலங்கள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு  மையப்புள்ளி வரை    விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று  நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.  ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி…

விமானத்தாக்குதலில் உயிரிழந்த மக்களது 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு (27.11.2023) காலை 10.30 மணியளவில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வினை நினைவிற்கொள்ளுவதற்கு ஏற்பாடாகி கொண்டிருந்த வேளை, இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன இதில் 12…

நல்லூர் புகழ் பிரசன்ன ஐயரின் குரலில் -டக் டிக் டோஸ் திரைப்பட பாடல்!

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெருமளவில் வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தினை தொடர்ந்து ராஜ் சிவராஜ் இயக்கத்தில்  டக் டிக் டோஸ் எனும் திரைப்படத்த்தினை அக்குழுவினர் தயாரிக்கின்றனர். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை  நல்லூரில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்னக்குருக்கள் பாடியுள்ளார். இதற்கான இசையினை பூவன் மதீசன்…

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள்!

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள் கண்ணீர் மல்க உறவுகளை நினைவுகூர்ந்தார்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. பொலீசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வளாகத்திற்கான வளைவு…

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்டலீக்கிற்கு தடைவிதிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பினால் (FFSL ) தடைசெய்யப்பட்டுள்ளதாக இன்று(28) அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அதுவரை முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக 28.11.23 அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உதைபந்தாட்ட…

புதுக்குடியிருப்பில் வீட்டிற்குள் கஞ்சா!

புதுக்குடியிருப்பில்- வீட்டில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது!முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 24-11-23அன்று. பொலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டிற்குள் பொதிசெய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பொதி கஞ்சாவினை மீட்டுள்ளார்கள் 1.5கிலோ நிறைகொண்ட கஞ்சா பொதிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன்…