Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: April 2023

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி!

கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என்பவரை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை…

முல்லைத்தீவினை சேர்ந்த சிலர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரமணாக வாழ முடியாது மேலும் 7 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கடல்வழியாக படகு மூலம் புறப்பட்ட, மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடியை வந்தடைந்தனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள…

7 ரூபாவினால் குறைக்கப்பட்ட பெற்றோல்..

பெற்றோல், டீசலின் விலைகள் நள்ளிரவு முதல் குறைப்பு..!!! இன்று (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. புதிய விலை 333 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 ஒக்ரைன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயினால்…

முல்லைத்தீவு கடலில் மீன்கள் இல்லாத நிலை மீனவர்கள் கவலை!

முல்லைத்தீவு மாவட்ட கடலில் உள்ள மீன் குஞ்சுகளை சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் அள்ளிசென்றுள்ளதால் தற்போதைய காலத்திற்கு ஏற்ற மீன்களின் பெருக்கம் இல்லாத நிலையில் கடல் காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு கடலில் மீனவர்கள் தொழிலுக்கு செல்வது குறைவாக காணப்படுவதுடன் மீன்களுக்கான தட்டுப்பாடும் காணப்படும் நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. சுருக்குவலை தொழிலாளர்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இப்போது சூடைமீன்…

குடும்ப புணர்வாழ்வு நிலையத்தினால் ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

குடும்ப புணர்வாழ்வு நிலையத்தினால் ஆசிரியர்களுக்கான செயலமர்வு யு எஸ் எயிட் (USAID) நிறுவனத்தின் நிதி உதவியுடன் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு (SCORE) திட்டத்தின் கீழ் குடும்ப புணர்வாழ்வு நிலையத்தினால் உளநலம் மற்றும் உளசமூகம் சார் சேவைகள் எனும் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 45 பேருக்கு பன்னிரெண்டு…

நுற்றாண்டு விழா 100 பானைகளில் பொங்கல் வைத்த கனகராயன்குளம் மா.வி!

கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா  வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்ப்பாடுகளை செய்துவருகிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை ஒட்டி…

டிஸ்கோ ஐயரின் இறுதி நிகழ்வுகள் 30.04.23 முள்ளியவளையில்!

28.04.23 அன்று சிலாவத்தை பகுதியில் வீட்டில் இருந்த வேளை கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அகலாமரணம் அடைந்த ஒதியமலையினை பிறப்பிடமாகவும் 01 ஆம் வட்டாரம் ஜயனார் குடியிருப்பு முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட அபயகிரியை செய்துவரும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ,மூர்த்திஐயர்) இவரின் உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி நிகழ்வுகுள் 30.04.23 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00…

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 8 படகுகள் 29 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. இவ்வாறு தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுவருவதாக முல்லைத்தீவு மீனவ அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கடற்படையினர் இந்தநடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்…

கிரியைகள் செய்யும் டிஸ்கோ ஐயர் அடித்து கொலை பணம் நகைகள் கொள்ளை!

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்யும் ஐயர் கொலை-நகை பணங்கள் கொள்ளை. முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில்வசித்து வரும் 69 ஆகவையுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் மரணக்கிரியைகள் அந்தியோட்டிகிரியைகள் செய்து வரும் டிஸ்கோ ஐயர்  என மக்களால் அறியப்பட்ட குடும்பஸ்தர்  கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகைகள் பணங்கள் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று 28-.04.23 அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த…

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஆனி 5ஆம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின்  வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தினை முன்னிட்டு பொங்கல் விழா ஏற்பாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (27)  முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலய…