முல்லைத்தீவில் மீண்டும் கொரோனா நால்வருக்கு தொற்று!

0 387

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் புதிய கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் படி மூவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளதுடன் மல்லாவி பிரதேசத்தில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள் மீண்டும் நீண்ட காலத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவை இனம் காணப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.
மக்களே உசாராகுங்கள் முகக்கவசம் அணியுங்கள் இது இன்றைய காலத்தின் முக்கியமாக காணப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.