செம்மலைப்பகுதியில் எரிபொருள் பதுக்கல் ஒருவர் கைது!

0 262

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு செம்மலை,பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரையும் எரிபொருட்களையும் பொலீசார் மீட்டுள்ளார்கள்.

வீட்டில் இருந்த 45 லீற்றர் டீசல், 21 லீற்றர் பெற்றோல் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 50 அகவையுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலீசில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.