புதுக்குடியிருப்பில் 49 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது!

0 289

முல்லைத்தீவு புதுக்குடியிருப்ப மூங்கிலாற்றுப்பகுதியில் சட்டத்திற்கு முரணாக பெற்றோல் பதுக்கிவைத்த நபர் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் இன்று 08.08.2022 இடம்பெற்றுள்ளது.

மூங்கிலாற்று பகுதியில் சட்டத்திற்கு முரணாக வீட்டில் 49 லீற்றர் பெற்றோலினை பதுக்கி வைத்திருந்த நபரினை முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்ற தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளார்கள்.

மூங்கிலாற்று பகுதியில் வீட்டில் பெற்றோல் பதுக்கி வைத்திருப்பதாக சம்பவம் தொடர்பில்  பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலீசார் சென்று சோதனை செய்தபோது பதுக்கிவைக்கப்பட்ட பெற்றோலுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரும் மீட்கப்பட்ட பெற்றோலும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் பாராப்படுத்தப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலீசார் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.