அரச அதிகாரிகளின் கோரிக்கை அமைச்சரின் கவனத்திற்கு திலீபன் எம்.பி!

0 142

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை தொடர்பில், ,லங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 ,ன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட போது வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் எம்.பி கவனயீர்ப்பில் ஈடுபட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தொலைபேசி ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரடியாக அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.


வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் அவர்கள் கருத்துதெரிவிக்கையில் ,ன்று மாலை அமைச்சரவை கூட்டமும் அதனை தொடர்ந்த ஜனாதிபதி சந்திப்பும் கொழும்பில் நடைபெறவுள்ளது அமைச்சரவை கூட்டத்தில் பொலீஸ் அமைச்சர் உள்ளிட்ட எல்லாரும் வருவார்கள் அதில் நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் ,ருக்கின்றது ,திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொள்கின்றார். அங்கும் அரச அதிகாரிகளின் பிரச்சினையினைமுன்வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.

,தில் அரச அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஏதோ ஒருவகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.