முகாமையாளரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0 133

நேற்றையதினம் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான பாரவூர்தியில் 420 லீற்றர் கொள்ளளவுடைய பரல்களில் அரச திணைக்களங்களுகென அடிக்கப்பட்ட பெற்றோல் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது , மற்றும் பெற்றோல் இல்லை என்ற பிற்பாடு பார ஊர்தியில் ஏற்றப்படுகிறது என்ற மக்களின் குழப்ப நிலையை அடுத்து மல்லாவி பொலிசாரால் பொறுப்பெடுக்கப்பட்ட பார ஊர்தியில் ஏற்றப்பட்ட பெற்றோல் இன்றைய தினம் துணுக்காய் அரச திணைக்களங்களுக்கென பகிர்ந்தளிக்கப்பட்டது

இதேவேளை நேற்றையதினம் முகநூல் பக்கங்கள் ஊடாக துணுக்காய் கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர், மற்றும் தலைவர்களை அவதூறாக பதிவிட்டமை தொடர்பில் இன்றையதினம் கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.