மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்பம்!

0 120

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையமான மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க பாரவூர்தி ஒன்றில் கொண்டு வரப்பட்ட இரு பரல்களில் இன்று காலை பெற்றோல் அடித்த போது அங்கு மக்கள் சூழ்ந்து பாரவூர்தியை முற்றுகையிட்ட நிலையில் எரிபொருள் நிலைய சூழலில் பெரும் குழப்ப நிலை உருவாகியிருந்தது

இவ்வாறு பரல்களில் பெற்றோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட(காலையில் ஆசிரியர் ஒருவர் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லவந்த நோயாளியை ஏற்றிய குடும்பஸ்தர் ஆகியோருக்கு அரை லீற்றர் கூட பெற்றோல் இல்லை என சொல்லப்பட்டுள்ளது) எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பெற்றோல் எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்பினர்
குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதுடன், பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் போலிசாருடனும் முரண்பட்ட நிலையில் இருந்தனர்
இதேவளை குறித்த பகுதிக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் , துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க போது முகாமையாளர் , மற்றும் தலைவர் ஆகியோர் வருகைதந்திருந்தனர்
இதேவேளை துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருளை ஏற்றிய பார ஊர்தி மக்களின் குழப்பநிலையினை அடுத்து மல்லாவி பொலிசாரினால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மக்களுடன் பிரதேச செயலாளர் கலந்துரையாடினார்

பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய மக்கள் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.