புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறுகல் பொலீஸ் தலையீடு!

0 145

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நின்றவேளை பெற்றோல் வழங்காததினால் முறுகல் நிலைஒன்று ஏற்பட்டுள்ளதை தொடர்;நது பொலீசாரின் தலையீடு சிறப்பு அதிரடிப்படையினரின் தலையீட்டினை தொடர்ந்து நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச வாகனங்களின் தேவைக்காக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கு அமைய புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று 20.05.2022 மாலை 6600 லீற்றர் பெற்றோல் வந்துள்ளது.
சாதாரண தரபரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் நடவடிக்கை மற்றும்அரச வாகனங்களின் அத்திய அவசிய தேவைக்காக இந்த எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோல் தாங்கி பெற்றோலினை இறக்கிய கையுடன் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.இதனால் யாருக்கு எரிபொருள் வழங்குவது என்பது தொடர்பில் குழப்ப நிலைஒன்று ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அங்கு கூடி நின்ற இளைஞர்கள் வீதியினை மறிக்க முற்பட்ட வேளை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலீஸ் குழுவினர் பிரசன்னமாகி நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் எரிபொருள் வழங்குனர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளார்கள்.

எந்த வாகனமாக இருந்தாலும் 500 ரூபாவிற்கு பெற்றோலினை வழங்க தீர்மானித்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை இரவில் இருந்துமுன்னெடுக்கப்பட்டுள்ளது இன்னிலையில் சிறப்பு அதிரடிப்பிடையினரும் குறித்த பகுதிக்கு வரவளைக்கப்பட்டுள்ளதுடன் பொலீசார் சிறப்ப அதிரடிப்படையினரின் கண்காணிப்பிற்க மத்தியில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.