கஞ்சி வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு!

0 22

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய காலகட்டத்தில்  மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்தனர் அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து  வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது  முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட கஞ்சியே  ஆகும்

இவ்வாறான நிலையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே அவர்களுடைய உணவான கஞ்சியின் வரலாற்றினை அல்லது அவர்களுக்கு அந்த காலப்பகுதியில் பசியாற்றிய இந்த கஞ்சியை வழங்கி    வரும் சந்ததியினருக்கும் எமது இனம் பட்ட துன்பங்களை தெரிவிக்கும் முகமாக தமிழின அழிப்பு  வாரத்தின்  ஆரம்ப நாளான  12.05.2022 ல்  இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு  வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் பொது அமைப்புகளும் இணைந்து  வேலைத்திட்டமொன்றினை  வடகிழக்கெங்கும் முன்னெடுக்கின்றனர்

அந்த வகையிலே இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு  முல்லைத்தீவு மாவட்டத்தில்  இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில்12.05.2022 அன்று  ஆரம்பித்து வழங்கி வைக்கப்பட்டது

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும்  இந்த கஞ்சி வழங்கும்  திட்டமானது இன்று மூன்றாவது  நாளாக  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  நகர்  பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது  

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த புலனாய்வாளர்கள் மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர் 

Leave A Reply

Your email address will not be published.