வல்லரசுகளின் தூதுவர்களை சந்தித்த புதிய பிரதமர்!

0 28

இலங்கையின் புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்கவும் பிரதமருக்கு குறித்த நாடுகளின் இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதேவேளை இலங்கை மக்களின் நலன் கருதி, ஜனநாயக செயற்பாடுகளின் ஊடாக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவுடன் நெருங்கி செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.