இந்தியாவின் பிணையுடன் IMF இடம் நிதியினைகோரிய இலங்கை!

0 29

இலங்கையின் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்தின முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதாக இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்ததாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது உடனடி நிதி ஒத்துழைப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், இதற்கான பிணை தரப்பாக இந்தியா முன்னிற்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது
இதேவேளை, நிதி அமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேற்று(18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பு….இந்தியாவின் பிணை முன்மொழிவில் இலங்கைக்கு நிதி கிடைக்குமாக இருந்தால்அந்த நிதியினை திருப்பிசெலுத்த வேண்டுமா அல்லது இந்தியாதான் கட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது இதுவரை வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடனினை திருப்பி செலுத்த என்ன பொறிமுறை இருக்கின்றது என்றும் இதனை பார்வையிடுபவர்கள் சிந்தித்து பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.