கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள்!

0 223

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் நடவடிக்கையில் முல்லைத்தீவு கரையோர கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் இரவு 12.00 மணிவரை ஒளிபாச்சி கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கடகில் இறங்கமுடியாத நிலையில் கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றது இந்த சம்பவத்தினை பார்க்கவந்தவர்கள் அனைவுரும் கூறிய வார்த்தை இவ்வாறான கடல் கொந்தளிப்பில் கடலுக்குள் யாரும் குழிக்கபோவார்களா என்று குறித்த இளைஞர்களின் அசண்டையீனத்தினாலேயே கடலில் மூழ்கியுள்ளார்கள் என மக்ககள் தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் சங்கங்கள் குறிப்பாக கள்ளப்பாட்டுப்பகுதி மீனவர் சங்கம் மின்பிறப்பாக்கி கொண்டுவந்து போக்கஸ் லையிட்டுக்களை கடற்கரையில் கட்டி உடலம் கரை ஒதுங்கும் பகுதியில் கண்காணிப்பினையும் முல்லைத்தீவு தொடக்கம் செம்மலை வரையான கரையயோர பகுதி மீனவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு கடலுக்கள் காணாமல் போன இரண்டு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்..

வவுனியாவில் இருந்து எவரின் உதவியும்இல்லாத நிலையில் ஒரு யுவதியும் நண்பர்கள் மூவரும் என நால்வர்கள் வாகனத்தில் வந்து கடலில் குழித்தபோது யுவதியின் கண்முன்னே அவருடன் வந்த மூன்று நண்பர்களும் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவினை மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த 27 அகவையுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவினை சேர்ந்த 26 அகவையுடைய விஜயகுமாரன் தர்சன், வவுனியா மதவுவைச்சகுளத்தினை சேர்ந்த 26 சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல் போயுள்ள நிலையில் 27 அகவையுடைய மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் உலம் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனை இருவரின் உடலங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கடற்தொழிலாளர்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் முன்னெடுத்துள்ளார்கள்.

கடலில் இறங்கி தேடமுடியாத நிலையில் உடலம் கடலலையில் அடித்து கரைஒதுங்கும் அல்லது கரைபகுதியில் கடலத்தின் அசைவு ஏதும் தெரியும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நள்ளிரவு 12.00 மணியாகியும் இரண்டு இளைஞர்களின் உடலங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருக்கின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.