விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு கோரி முல்லைத்தீவில்…

0 7

விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக உரப்பிரச்சினை காணப்படுகின்றது இந்த பிரச்சினைக்குஎதிராக அரசாங்கத்திற்கு வலியுறுத்தி எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி விவசாயிகளின் உரிமை பிரச்சினைக்கு தீர்வு கோரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வு கோரி கண்டன போராட்டம்.உரம் இன்றி உழவு இல்லை என்ற தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் இது முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18.10.21 முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

Leave A Reply

Your email address will not be published.