சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய சிசுவின் பிரிவு !

0 63

பால் குடித்து விட்டு தூங்கிய ஒன்றரை மாத பெண் குழந்தை உடல் அசைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளதால் குடும்பத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரவு பால் குடித்து விட்டு தூங்கிய ஒன்றரை மாதப் பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த குழந்தை அசைவற்றுக் காணப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துசென்றபோது ஏற்கனவே உயிர் பிரிந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளவு தனங்கிளப்பு வீதியைச் சேர்ந்த அபூ ஹீறைறா ஹாஜர் என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சிசுவின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைகாகன காரணத்தினை கண்டறியும் நடவடிக்கையில் மருத்துவமனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கிராமத்தினை சோகத்தில் ஆழ்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.