வடமராட்சி கடலில் மீனவர்களின் கடற்போர் வெடித்தது-மூவர் காயம்!

0 84

வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து மீனவர்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாத அரசு மீனவர்களின் வளங்களை நாசம் செய்யும் இந்திய இழுவைப்படகுகளால் நாளாந்தம் இழப்பினை சந்தித்து வருகின்றார்கள்.

இன்னிலையில் இன்று காலை யாழ் மீனவர்களுக்கு சொந்தமான பருத்தித்துறை கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது 3 மீனவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

வடமராட்சி கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய இழுவைப்படகுகள் பருத்தித்துறை மீனவர்களின் வலைகள் என்பன இழுவைப்படகுகளால் அழிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கடலில் இந்திய மீனவ இழுவைப்படகில் இருந்தவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது

இதன்போது இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்கள் கற்களால் பருத்தித்துறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இதன்போது முனை பகுதியினை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறிய காயங்களுக்குஉள்ளாகியுள்ளார்கள்.

இந்திய -பருத்தித்துறை மீனவர்களுக்கிடையில் மோதல் வலுவடைந்துள்ள நிலையில் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு கடற்படையினர் அங்குசென்றுள்ள நிலையில் இந்திய இழுவைப்படகுகள் தப்பிஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழகதமிழ் மீனவர்களையும் யாழ்ப்பாண மீனவர்களையும் மோதலில் ஈடுபடவைத்த பெருமைஇந்த அரசினையே சாரும்…

Leave A Reply

Your email address will not be published.